Home எம்மைப்பற்றி
எம்மைப்பற்றி PDF அச்சிடுக மின்னஞ்சல்
admin ஆல் எழுதப்பட்டது   
வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010 01:49

நவீன உலகின் புதிய மாறுதல்களுடன் ஒன்றிணைந்ததாய் பிரிக்கமுடியததாய் இணையம் மாறியிருக்கின்றது. இணையம் உலகின் ஒவ்வொரு அசைவுடனும் தன்னை முழுமையாக இணைத்துள்ளது. உலகின் மாற்றங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற சூழலில் உலகின் முதன்மையாக விளங்க வேண்டிய உலகில் முதலில் தோன்றியதாக அறியப்பட்டுள்ள தமிழ் இனம் தனக்கான அனைத்தையும் இழந்து தனது பல பரிமாணத்தை உலக நாடுகளிடம் தொலைத்து நிற்கின்றது.
             இது மாற்றியமைக்கப்பட்டு ஒருமைப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் மீதான உலகின் பார்வை மீண்டுமொருமுறை திசை திருப்பப் படுவதற்கான அதிக தேவை தவிர்க்கப்பட முடியாததாகவே தற்போது மாறியுள்ளது. நாளுக்கு நாளான புதிய இணையத் தளங்கள் பல்கிப் பெருகி வருகின்றன. குறிப்பாக தமிழ் மக்களைப் பிரதிபலிக்கின்ற தமிழ் மக்களினுடைய ஆன்மாவாக விளங்கவல்ல செய்தித் தளங்களாக இணையத்தளங்கள் தோற்றம் பெற்றாலும் அவறின் ஆயுள் என்பது நீண்டுநிலைப்பதில்லை. இந்தச் சூழலில் 'புலர்வு' என்கின்ற இணையத்தளம் உலகத் தமிழ் மக்கள் முன் புதிய வருகையாய் அமைகின்றது. இந்தத் தளத்திற்கான வாசகர்களினுடைய முழுமையான ஆதரவினை எதிர்பார்க்கின்றோம். அதே வேளை உங்கள் விமர்சனங்களே இந்தத் தளத்தின் மேம்பட்ட வளர்ச்சியில் கூடுதல் பங்கு வகிக்கும் என புலர்வுக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
              இந்தத் தளம்தொடர்பான விமர்சனங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் அதேவேளை வெளிப்படுத்தப்பட வேண்டிய செய்திகள் இருந்தால் அவ்றினை புலர்வின் முன் வெளிப்படுத்துங்கள். இரகசியம் காக்கப்படும். குறிப்பிடப்படும் செய்திகள் அல்லது தகவல்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தி வெளியிடுவதற்கு முயல்வோம்.
              புலர்வான தேசம் நோக்கிப் பயணிக்கும் எங்கள் ஊடகப் பணியுடன் நீங்களும் கை கோருங்கள்.

நன்றி

நிர்வாகம்,
புலர்வு இணையத்தளம்.

சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2010 11:01 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது