Home இலங்கை செய்திகள் கொழும்பு செய்திகள் உத்தேச அரசியலமைப்பின் சில விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்புடன் பேசப்படுமாம்!
உத்தேச அரசியலமைப்பின் சில விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்புடன் பேசப்படுமாம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 31 ஆகஸ்ட் 2010 23:18

sri_lankaஎதிர்க்கட்சி மற்றும் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே  உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு ஐ.தே.க. தனது ஆதரவை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பில் கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஐ.ம.சு.முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

1978 ஆம் ஆண்டு யாப்பினூடாக கடந்த 32 வருட காலமாக பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் புதிய யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையானவாறே இதில் திருத்தம் செய்யப்படுகிறது.

அபிவிருத்திப் பணிகளுக்குள்ள தடைகள் இதனூடாக நீக்கப்பட்டு அரசியல் ஸ்திர நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாப்புத் திருத்தம் செய்தால் அது அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஐ.தே.க. ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். அதலபாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் ஐ.தே.க இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியதாகும்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க ஆதரவு வழங்க வேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறியதாவது,

உத்தேச யாப்பு திருத்தங்களின் மூலம் ஜனநாயகத்திற்கோ மக்களின் இறைமைக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது.

யாப்பு திருத்தம் குறித்து ஐ.தே.க வுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்தத் திருத்தங்கள் எழுத்து மூலம் ஐ.தே.கவுக்கு அறிவிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பூர்வாங்க பேச்சுகள் நடத்தப்பட்டன. கட்சித் தலைவர் நாட்டில் இல்லாததால் அவருடன் பேச்சு நடத்தப்படவில்லை.

எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள செனட்சபை போன்ற விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஆராயப்படும்.

ஐ.ம.சு. முன்னணியில் உள்ள கூட்டுக் கட்சிகளுடனும் இது குறித்து பேசப்பட்டது. உத்தேச யாப்புத் திருத்தம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் அங்கு சமுகம ளித்திருந்தனர். ஏகமனதாகவே யாப்பு திருத்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் புதிய திருத்தம் மூலம் நீடிக்கப்படவில்லை. பதவி வகிக்கக்கூடிய வரையறையே நீக்கப்பட் டுள்ளது. ஒருவரை மூன்றாவது தடவையோ 4 ஆவது தடவையோ ஜனாதிபதியாக தெரிவு செய்வது குறித்து மக்களே தீர்மானிப்பர்.

1978 ஆம் ஆண்டு யாப்பில் இதுவரை 17 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 18 ஆவது திருத்தமே தற்பொழுது முன்னெ டுக்கப்பட உள்ளது.

அரசியலமைப்பை முழுமையாக திருத்த நீண்டகாலம் பிடிக்கும். அதில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றார்.

அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறியதாவது, மக்களின் இறைமையை விரிவாக்கும் வகையிலேயே யாப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 2 தடவைகளே பதவி வகிக்கலாம் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளபோதும் ஒருவரை மூன்றாவது தடவையாக நியமிக்கும் உரிமை மக்களுக்கே உள்ளது.

கட்சியை பலப்படுத்தி யுத்தத்திற்கு முடிவு கட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2 தடவையை விட கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை போன்ற மாற்று யோச னைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் நிறைவேற்று பிரதமர் முறை உலகில் எங்கும் வெற்றியளிக்கவில்லை.

யதார்த்த ரீதியாக அமுல்படுத்தக் கூடிய திருத் தங்களே முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டுத் தலைவரை தெரிவு செய்யும் உரிமை வடக்கு, கிழக்கு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புகிறது என்றார்.