| த.தே.கூட்டமைப்பு - இந்திய இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு |
|
|
|
| வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 01:24 |
|
இந்த சந்திப்பில் அரசாங்கத்தினால் மீளக்குடியேற்றப்பட்டதாக கூறப்படும் மக்களில் பலர் இன்னும் தமது சொந்தக் கிராமங்களிலேயே தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் இன்னும் தமது சொந்த காணிகளுக்கு செல்ல முடியாமல் தங்கள் நிலங்களுக்கு அருகிலேயே தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு மாதக் கணக்கில் தங்க வைக்கப்பட்டள்ளதாகவும் இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளுக்கு மீள் குடியேற்றம் நடைபெற்றதாக பல உறுதி மொழிகளை வழங்கிய போதும் அது நடைபெறவில்லை என்பது பற்றியும் சுட்டிக்க காட்டப்பட்டுள்ளது. மக்கள் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வந்த வந்த இடங்கள் அபகரிப்பட்டு இராவணுவ முகாம்கள் மற்றும் இராணுவ குடியிருப்புகள் அமைக்கபட்டு வருகின்றன. பல வருடங்களாக தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் தமது வாழ்வாதரங்களை கொண்டு செல்வதற்காக பல்வேறு பலன்தரு மரங்களை நட்டுள்ளனர் இந்த நிலையில் அவர்களின் பாரம்பரிய நிலங்கள் அபரிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நிருபமா ராவ் இது தொடர்பாக இயங்கனவே தாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்ததாகவும் மேலும் தாங்கள் இது தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவினால் அமைத்துக் கொடுக்கப்பட இருக்கும் வீடுகள் இந்திய அரசாங்கங்கத்தினால் நேரடியாகவே கட்டிக் கொடுக்கப்படும் அது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக நடைபெறாது எனவும் தெரிவித்தார். மேலும் கிழக்கில் போர் அனர்த்தம் காரணமாக விதவைகளான பெண்களின் நலன்கள் தொடர்பான வேலைத்திட்டங்களை தாங்கள் விரைவில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும், இதை படிப்படியாக வடக்கு நோக்கியும் விரிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இந்திய இந்திய வெளியுறவுச் செயலாளருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர், துனைத்தூதுவர் உட்பட்டோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். |