| தமிழ் மக்கள் ''சூரியனையோ, சந்திரனையோ'' கேட்கவில்லை என்கிறார் டக்ளஸ்! |
|
|
|
| சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:09 |
|
தான் இன்று அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்கள தலைமைகளின் போக்கும், அதன் பின்னர் தமிழ் தரப்பினரின் மத்தியிலான இணக்கமின்மையுமே இனப்பிரச்சினை இழுபறிநிலையை எட்டியமைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பல மணி நேரம் ஆணைக்குழுவின் முன்னதாக சாட்சியமளித்த அவர், இலங்கையர் என்பதற்காக தமிழர் என்பதையோ அல்லது தமிழர் என்பதற்காக இலங்கையர் என்பதையோ விட்டுக்கொடுக்க தாம் தயாராக இல்லை என்றும் ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். அரசியலமைப்பில் தற்போது உள்ள விடயங்களை அமல்படுத்துவதனை ஒரு ஆரம்பமாகக் கொண்டு தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண அரசாங்கம் விளைய வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் முன்பாக தான் கூறியதாக அவர் தெரிவித்திருக்கின்றார். |