Home இலங்கை செய்திகள் கொழும்பு செய்திகள் "அரசுக்கு பெரும்பான்மையைப் பெற வழி செய்தது ஐ.தே.க" - ஜே.வி.பி குற்றச்சாட்டு!
"அரசுக்கு பெரும்பான்மையைப் பெற வழி செய்தது ஐ.தே.க" - ஜே.வி.பி குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:24

tilvinஅரசாங்கத்திற்குமூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வழி ஏற்படுத்திக் கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சியே என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித நிபந்தனைகளுமின்றி நாம் செயற்பட்டு வருகின்றோம்.

மேற்படி திருத்தச் சட்டத்திற்கெதிராக நீதிமன்றம் சென்ற ஒரே ஒரு அரசியல் கட்சி, மக்கள் விடுதலை முன்னணிதான்.

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வழி ஏற்படுத்திக் கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சியே.

மேலும், யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முடிந்தால் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கெதிராக வாக்களித்துப் பார்க்கட்டும்" என ரில்வின் சில்வா சவால் விடுத்துள்ளார்.