| "ஜே.ஆரும், சந்திரிகாவும் முயன்றதையே மஹிந்த செய்கிறார்" - சொல்கிறார் டலஸ்! |
|
|
|
| புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 01:06 |
|
மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டு 32 வருடங்கள் நிறைவடைகின்றன. இதில் ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் சந்திரிகா குமாரதுங்கவும் மட்டுமே 2 தடவைகளும் முழுமையாக பதவியில் இருந்தனர். முதலாவது பதவிக் காலத் துடன் ஒப்பிடுகையில் தமது இரண்டாவது பதவிக் காலத்தில் அவர்கள் ஜனநாயகத்திற்கு சவாலான முடிவுகளை எடுத்தனர். தனது வயது, அரசியல் நோக்கம் கட்சி என்பவற்றுக்கு ஏற்றவாறே ஜே. ஆர். 2 தடவைகளாக ஜனாதிபதி பதவிக் காலத்தை மட்டுப்படுத்தினார். இரண்டாவது பதவிக் காலம் முடிவடைகையில் ஜே. ஆருக்கு 84 வயதாக இருந்தது. ஆனாலும் அவர் 3 ஆவது தடவையாகவும் பதவிக் காலத்தை நீடிக்க முயன்றார். இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வாகவே 2 தடவை என மட்டுப்படுத்தப்பட்டுள்ள பதவிக் கால எல்லையை நீக்கியுள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அதிகாரத்தை தக்க வைக்கவோ அவரின் மகனுக்கு அவகாசம் வழங்கவோ இந்தத் திருத்தம் செய்யப்படவில்லை. இதனூடாக சர்வாதிகார ஆட்சியே உருவாகும் என்ற எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உருவாக்க கை உயர்த்திய ரணில் தலைமையிலான ஐ. தே. கவுக்கு யாப்புத் திருத்தம் குறித்துப் பேச அருகதை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். |