Home இலங்கை செய்திகள் கொழும்பு செய்திகள் விரைவில் சர்வ கட்சிக்குழு - சஜின் வாஸ்!
விரைவில் சர்வ கட்சிக்குழு - சஜின் வாஸ்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 06:05
sajin_b_vassநாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்காகப் பெயர்களை வழங்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர். பொறுமைக்கும் எல்லையுண்டு. இந்த நிலைமை தொடருமானால், இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசு, சர்வ கட்சிக் குழுவைக் கூட்டும். அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அரச தரப்புப் பேச்சுக் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்ததன நேற்று தெரிவித்தார்.
அரசுக்கும், தமிழ்க் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவந்த பேச்சுகள் தொடருமா? அதன் நிலைமை என்ன  ?  என்பவை பற்றிக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
பேச்சுகள் குறித்து அமைச்சரவை எடுத்த முடிவில் அரசு உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பெயர்களைத் தரும்வரை கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில்லை என்ற அமைச்சரவைத் தீர்மானத்தை எம்மால் மீற முடியாது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பெயர்களைத் தருவதில் கூட்டமைப்பு தொடர்ந்து இழுத்தடிப்பைச் செய்து வருகிறது. பெயர்களைத் தருவதற்கான எந்த அக்கறையும் அவர்களிடத்தில் இல்லையென்றே எமக்குப்படுகிறது. எனவே, தீர்வு முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க ஜனாதிபதி அறிவித்தபடி சர்வகட்சிகள் விரைவில் கூடும். அதற்கான திகதி அறிவிப்பும் வெளிவரும். கூட்டமைப்பு சாதகமான பதிலை வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பதால் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமில்லை என்றார் சஜின் வாஸ்.