| மட்டக்களப்பில் சிறைக்கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்! |
|
|
|
| வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:30 |
|
அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியில் வைத்தே இவ்விருவரும் தப்பிச் சென்றிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 4.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு கைதிகள் அக்கரைப்பற்று மஜிஸ்திரேட் நீதிமன்றிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் கொண்டு செல்கையிலேயே அவ்விருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இமாமுதீன் அன்வர், ஆதம்பாவ ஜெசீர் ஆகிய இருவருமே தப்பிச் சென்ற கைதிகளாவர். இவர்களைத் தேடி அக்கரைப்பற்று பொலிஸார் வலை விரித்துள்ளனர். |