| செந்தில் பாணியில், காதைக்கடித்தார் பிரதிஅமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரி! |
|
|
|
| புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 01:16 |
|
அதிகார பலமுடைய பிரதியமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பதுரலிய நகருக்கு மதுபோதையில் சென்று மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதாக கொழும்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அதிகாரி மற்றொரு பாதுகாப்பு அதிகாரியுடன் சென்று கடைக்கு முன்னால் சிறுநீர் கழிக்க முற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து கடை உரிமையாளருடன் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனது கடைக்கு முன்னால் இவ்வாறு செய்யவேண்டாம் என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பாதுகாப்பு அதிகாரி கடை உரிமையாளரின் காதை கடித்ததுடன் பின்னர் அவரை தாக்கி உள்ளார். சம்பவத்தை பார்த்த அந்தப்பகுதிவாசிகள் பாதுகாப்பு அதிகாரியை தாக்கி பொலிஸாரிடம் அவரை கையளித்துள்ளனர். காயமடைந்த வர்த்தகரும் பாதுகாப்பு அதிகாரியும் களுத்துறை நாகொட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |