| அரசியல் பிழைப்பு நடத்தவே தமிழர் விவகாரம் - விக்கிரமபாகு குற்றச்சாட்டு! |
|
|
|
| வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 19:11 |
|
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னரே செனட் சபை அமைக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் இந்த விதி முறைகளுக்கமையத் தான் செனட்சபை அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு என்ன செய்கின்றோம், எப்படிச் செய்கின்றோம் என எதுவும் புரியாமல் குடிகாரனைப் போல் தள்ளாடுகிறது அரசு.
13 பிளஸ் என்கின்றனர். இல்லை....இல்லை... செனட் சபை என்கின்றனர். எதனை நாம் நம்புவது?
மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்ட பின்னரே செனட் சபை அமைக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையையே அமெரிக்காவும் பின்பற்றியது. இவ்வாறு இல்லாமல் ஆரம்பமே செனட்சபையாக இருந்தால் அதனால் ஒன்றையும் சாதித்துவிட முடியாது என்பதே யதார்த்த பூர்வமான உண்மையாகும்.ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ ஜாதிகஹெல உறுமயவின் தாளத்திற்கு ஆடும் ஒரு கைப்பொம்மையாக செயற்படுகின்றார். ஜனாதிபதி மஹிந்த பொய் உறுதிமொழிகளை அள்ளி வீசுகின்றார். இது இந்தியாவிற்கு நன்கு தெரியும். இந்த உண்மையை வெளியே கூறினால் இந்திய அரசின் கனவாகவிருக்கும் நுரைச்சோலை, சம்பூர் உட்பட முக்கியமான சில திட்டங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் அந்த நாட்டை ஊமையாக்கிவிட்டது என்றார். |