Home இலங்கை செய்திகள் பொதுவான செய்திகள் சன்னார் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மன்னார் நகரசபையில் கவனயீர்ப்புத் தீர்மானம்!
சன்னார் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மன்னார் நகரசபையில் கவனயீர்ப்புத் தீர்மானம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 16:41
kumareshமன்னார் நகரசபையின் 2012ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டத்தில், சன்னார் கிராம மக்களை வெளியேற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மன்னார் நகரசபைத் தலைவர் ச.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற நகரசபை கூட்டத்தில், உறுப்பினர் எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் சன்னார் தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானம் ஒன்றினைக் முன்வைத்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சன்னார் மக்கள் 1986ஆம் ஆண்டு தொடக்கம் அப்பகுதியில் காடுவெட்டி துப்புரவு செய்து வசித்து வருகின்றனர். காணிக்கச்சேரியில் அந்தக் காணிகள் அவர்களுக்கு உரித்தானது என்று அரசாங்க உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்த இப்பிரதேசத்து மக்கள் முள்ளிவாய்க்கால்வரை சென்று செட்டிகுளம் பகுதியில் முட்கம்பிவேலிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்பொழுது இந்த மக்களை இங்கிருந்து வெளியேற்றிவிட்டு மற்றொரு சமூகத்தினரை குடியேற்ற சிரேஸ்ர அரசியல்வாதி முயற்சித்து வருகின்றார்.

இந்த அரசியல்வாதிக்கு அப்பகுதி உதவி அரசாங்க அதிபரும் துணை நின்று மக்களை அடிமைகளாக நடத்துகின்றனர். அதிகாரியின் சாரதியும் அதிகாரியும் அரசியல்வாதியின் அடியாட்களாகச் செயற்படுவதாக சன்னார்மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.

எமது தீர்மானங்கள் அரசாங்க உயர்மட்டம்வரை செல்வதால், இம்மக்களின் நிர்க்கதியான நிலை எமது சபை ஊடாக உயர்மட்டத்தின் கவனத்திற்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இக்கண்டனத் தீர்மானத்தை இச்சபை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.