| பிளேக் வருகையை உறுதிப்படுத்தியது வெளிவிவகார அமைச்சு! |
|
|
|
| ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 01:10 |
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்காசியவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இலங்கை வரவுள்ளார்.இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வரும் அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இதன்போது ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரம் என்பன தொடர்பாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|