|
64 ஆவது சுதந்திர தினத்தில் ஆயிரத்து 450 கைதிகள் விடுதலை! |
|
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 01:19 |
|
இலங்கையின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரத்து 450 சிறைக்கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் அபராதம் செலுத்த முடியாத சிறைக் கைதிகளே விடுதலை பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி குறிப்பிட்டார். இவர்களில் அதிகமானோர் போகம்பறை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுதவிர வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 145 கைதிகளும் மஹர சிறைச்சாலையிலிருந்து 115 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கூறினார். சுங்க சட்டளைச்சட்ட மீறல் மற்றும் ஆட்கொலை உட்பட 27 வகையான குற்றங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட மாட்டர்கள் என்றும் அவர் தெரிவித்தார் இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு மேலும் பெரும்பாலான கைதிகளின் தண்டனைக்காலத்தை ஒரு வாரத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். |
|
ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 01:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |